கந்துவட்டி கொடுமை! கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்பு! 3பெண் பலி!!

0
0

கந்து வட்டி கொடுமையால் மனைவி,  2 பெண் குழந்தைகள் உடன் கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

இப்பரபரப்பு சம்பவம் நெல்லை மாவட்டத்தில் இன்று நடந்துள்ளது.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்  குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் அளிக்க மக்கள் வந்திருந்தனர்.

 

கடையநல்லூரை சேர்ந்த கூலி தொழிலாளி இசக்கிமுத்து, மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் சரண்யா, அட்சயாவுடன் வந்தார்.

திடீரென்று அவர் கையில் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தனர்.

அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து  சுப்புலெட்சுமியையும், குழந்தைகளையும் காப்பாற்ற முயற்சித்தனர்.

ஆனால், அதற்குள் அவர்கள் உடல் முழுவதும் தீ பரவியது.   நால்வரும் பாளையங்கோட்டை தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு 70சதவீதத்துக்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இசக்கிமுத்து தங்கள் ஊரில் உள்ள ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். சிகிச்சை செலவுக்காக அவர் வாங்கிய பணத்தை உடனடியாக கட்டமுடியவில்லை.

இதனால் கந்துவட்டிக்கு கொடுத்தவர்  மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் காவல் நிலையம், மாவட்ட கண்காணிப்பாளர், கலெக்டர் அலுவலகங்களில் 6 தடவை புகார் அளித்தார் இசக்கிமுத்து.

நடவடிக்கை ஏதும் இல்லாததால் இன்று குடும்பத்தினருடன் தீக்குளித்தார்.

திருநெல்வேலி கலெக்டராக பொறுப்பேற்ற சந்தீப் தந்தூரி, மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமைகள் ஒழிக்கப்படும் என்று கூறினார்.

கந்துவட்டிக்கு 4 உயிர்கள் பலியான நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது.  கந்துவட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்  என்று உறுதிகூறியுள்ளார் கலெக்டர்.

சிகிச்சை பலன் இன்றி சுப்புலெட்சுமியும், அவரது இரு குழந்தைகளும் இறந்தனர்.  இசக்கிமுத்துவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

படங்கள், விடியோ, நன்றி: குற்றாலச்சாரல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here