பினாங்கு நகரில் பிரமாண்ட கோலம்!

0
32

பினாங்கு நகரில் பிரமாண்ட ரங்கோலி கோலம் உருவாக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பினாங்கில் உள்ள ஷாங்ரிலா கோல்டன் ரிசார்ட்டில் இக்கோலம் உருவாக்கப்பட்டது.


ரிசார்ட்டில் உள்ள நீச்சல்குளத்தில் 100பேர் பங்கேற்று 117மணிநேரம் செலவிடப்பட்டு இக்கோலம் வரைந்துள்ளனர்.
அழகு மயில் ஒன்று தோகையுடன் கூடியதாக இக்கோலம் அமைந்துள்ளது.
638 சதுரமீட்டர் பரப்பளவில் மிதக்கும் கோலமாக இக்கோலத்தில் தெர்மக்கோல்ஷீட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


87கிலோ தேங்காய்துருவல், 37கிலோ பசை, 47துண்டுகள் தெர்மக்கோல்ஷீட், 5ஆயிரம் பல்புகள் இக்கோலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கோல்டன் சாண்ட் ரிசார்ட், பினாங்கு இந்து அசோசியேசன், பினாங்கு இண்டி இண்டர்நேஷனல் கல்லூரி ஆகியவை இணைந்து இக்கோலத்தை உருவாக்கின.


மலேசிய சாதனை புத்தகத்தில் மிக பிரமாண்ட மிதக்கும் கோலம் என்ற சாதனையாக இக்கோலம் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here