கதிராமங்கலம்! மாதிரிமங்கலம்! தமிழகம் மங்களம்!!

ஓஎன் ஜிசி நிறுவனம் தமிழகத்தில் மேலும் 100 எண்ணெய்க்கிணறுகள் அமைக்க தயாராகி வருகிறது.

இதனால் சுற்றுச்சூழல் பிரச்சனை ஏதும் ஏற்படுவதில்லை.

இதுகுறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறை குத்தாலம் மாதிரிமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எரிவாயு எடுத்து செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கசிவு அருகில் உள்ள நிலத்துக்குள் சென்றுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விடுமுறை என்பதால் அவர்கள் அசட்டையாக இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், அங்குவந்த வைகோ, குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார்.

இதுபோன்று அதிகாரிகள் இருந்தால் நாளை தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் ஆபத்துக்குள்ளாக நேரிடும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION