இந்த ஜோடியின் திருமணச்செலவு 11 ரூபாய்தானாம்!

திருமணம் செய்ய செலவு ரூ.11 மட்டுமே ஆனதாம்.

நம்பமுடிகிறதா. இக்காலத்தில். ஆனால் பஞ்சாபில் இப்படி ஒரு திருமணம் நடந்துள்ளது.

ஆப்கானை சேர்ந்த கல்லூரி மாணவி நபிஸதா.  இவர் 2 மாதங்களுக்கு முன் பஞ்சாப் வந்தார்.

அங்குள்ள நபா கிராமத்தில் கல்விச்சுற்றுலா மேற்கொண்டிருந்தபோது ஜாகித் அலியை சந்தித்தார்.

இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டது.

காபூல் திரும்பியும் நபிஸதா  காதலர் நினைவாகவே இருந்தார்.

கடந்தவாரம் மீண்டும் பஞ்சாப் வந்தார் நபிஸதா.

ஜாகித் அலியை சந்தித்து திருமணத்துக்கு வலியுறுத்தினார். இருவர் வீட்டின் சம்மதத்துடன் பஞ்சாபில் எளிமையாக திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு வந்து வாழ்த்திய மதகுருவுக்கு ரூ.11 தரப்பட்டது.

இதுவே எனது மகனின் திருமணச்செலவு என்கிறார் ஜாகித் அலியின் தந்தை தேவ்கான்.

இத்திருமணம் காதலுக்கு ஜாதி, மதம், இனம், எல்லை கிடையாது என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

நானும் காதல் திருமணம் செய்தவன். எனவே, இக்குழந்தைகளின் உண்மையான அன்பை புரிந்துகொள்ள முடிகிறது என்று தேவ்கான் தெரிவித்தார்.

About the author

Related

JOIN THE DISCUSSION