எதிர்கட்சிகள் ஒன்றுபட்டால் 2019 தேர்தலில் ஆட்சி மாற்றம்..! மம்தா பானர்ஜி..!

0
0

எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றுபட்டால் 2019ம் ஆண்டு தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

எதிர்க்கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஒருங்கிணைப்பதில் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் வெற்றி பெற்றுள்ளார்.  இதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். அதில் நாங்களும் இடம் பெற்றுள்ளோம் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

நாட்டில் உள்ள அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்றுபட்டால் நிச்சயம் வெற்றி நமக்குத்தான்.2019ம் ஆண்டு நடை பெற உள்ள லோக் சபா  தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும். நம் வெற்றியின் மூலம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

கூட்டணியிலிருந்து நிதிஷ் விலகியதைப் பற்றி சிந்திக்காமல் 100 சரத் யாதவ்கள், 100 லாலுக்கள் மற்றும் 100 அகிலேஷ்கள் குறித்தே  எனது சிந்தனை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here