மெகா ரெய்டு! சசிகலாவின் பிரச்சார பீரங்கிகள் முடக்கம்!!

0
0

சென்னை: தமிழகத்தில் வருமானவரித்துறை ரெய்டு என்றால் ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப்பார்க்கிறது.     கடந்த டிசம்பரில் வருமானவரித்துறை ரெய்டு தலைமை செயலாளர் வீடு, அலுவலகங்களில் நடந்தது. ஒரு மாநிலத்தின் தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ரெய்டு அதிர்ச்சியை தந்தது.

தற்போது தமிழகம் முழுவதும் 180 இடங்களில் வருமானவரி சோதனை நடந்துள்ளது.  சசிகலா குடும்பத்தினரும், அவருக்கு வேண்டியவர்கள் வீடுகளில் மட்டும் இந்த சோதனை நடந்துள்ளது. 4வது நாளாக சோதனை தொடர்கிறது.

சசிகலாவுக்கு சொந்தமானது என்றாலும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு என்றும், அக்கட்சிக்கான தொலைக்காட்சி என்றும் நமது எம்ஜிஆர் நாளிதழும், ஜெயா டிவியும் செயல்பட்டு வருகின்றன.

பன்னீர்செல்வமும், பழனிச்சாமியும் இணைந்தபின் இவற்றை மீட்போம் என்று தீர்மானம் நிறைவேற்றினர். தனியார் சொத்துக்கள் மீது கைவைக்க முடியாது என்று அவற்றை நிர்வகித்து வரும் விவேக் ஜெயராமன் தெரிவித்தார்.

அந்த விவேக் ஜெயராமன் வீட்டில் 4வது தினமாக இன்றும் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.  மெகாரெய்டில் சிக்கியதாக ஒரு விடியோ தற்போது வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வந்தபோது பேப்பர், டிவி துவக்கலாம் என்று ஆர்வம் காட்டினார். ஒன்றிணைந்த பின்னால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

சசிகலா, தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அதிமுக செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்ட பின்னரும் ஜெயா டிவிக்கு அதிமுகவினரிடம் மவுசு குறையவில்லை. அவர்கள் தொடர்ந்து அதனை பார்த்து வருகின்றனர்.  டிஆர்பி ரேட்டிங்கில் ஜெயா டிவிக்கு எந்த இறங்குமுகமும் இல்லை என தெரியவந்துள்ளது.

முதல்வர் பழனிச்சாமி குறித்து துணிந்து எதிர்ப்பு செய்திகளை ஒளிபரப்ப தொடங்கியது ஜெயா டிவி.

நமது எம்ஜிஆர் நாளிதழில் மத்திய அரசை விமர்சிக்கும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன.

சசிகலாவுக்கு அரணாக ஜெயாடிவி உள்ளதாக எதிர் தரப்பு கருதுவதால் இந்த ரெய்டை சாதகமாக பயன்படுத்தி  டிவியையும், பேப்பரையும் முடக்குவதாக நடவடிக்கைகள் அமைந்துள்ளன. 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here