மதுரை பல்கலையில் பெண் பேராசிரியருக்கு சரமாரி கத்திக்குத்து

0
0

பல்கலைக்கழகத்தில் பெண் பேராசிரியரை சரமாரியாக கத்தியால் குத்தியவர் கைதானார்.

மதுரை பல்கலைக்கழகத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

மதுரை பல்கலைக்கழகத்தின் பத்திரிகையையில் துறை தலைவராக உள்ளார் பேராசிரியை ஜெனிபா.

இத்துறையில் ஜோதி முருகன் என்பவர் விரிவுரையாளராக பணியாற்றிவந்தார்.

சில முறைகேடுகளால் ஜோதிமுருகன் கெஸ்ட் லெக்சரர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இன்று பல்கலைக்கழகம் வந்த ஜோதிமுருகன் தனக்கு மீண்டும் வாய்ப்பு தரும்படி கேட்டுள்ளார்.

ஜெனிபா அதற்கு மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமுருகன் கத்தியால் ஜெனிபாவை சரமாரியாக தாக்கினார்.

ஜெனிபாவின் உடலில் 13 இடங்களில் காயம் ஏற்பட்டு அவர் தீவிர சிகிச்சை பெறுகிறார்.

சந்தேகத்திற்கிடமான வகையில் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து தப்பிக்க முயன்ற ஜோதி முருகனை மாணவர்கள் சுற்றி வளைத்தனர்.

நாகமலை புதுக்கோட்டை போலீசில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here