ரயில் பயணத்தில் எம்.ஆதார்..! புதிய டிஜிட்டல் முறை அறிமுகம்..!

ரயில் பயணத்தில் முன் பதிவு செய்யப்பட்ட பயணங்களில் பயணிகள், அவரது அடையாள ஆவணமாக இந்திய அரசு வரையறுத்துள்ள சான்றுகளில் ஒன்றை காட்டவேண்டும். ஆதார்,வோட்டர் ஐ.டி., பாஸ்போர்ட்,டிரைவிங் லைசென்ஸ் இப்படி ஏதாவது ஒரு ஆவணத்தை அடையாள சான்றாக காட்டவேண்டும்.

தற்போது இந்திய ஆதார் ஆணையம் அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் வடிவிலான எம்.ஆதாரை, ரயில் பயணத்தின்போது அடையாள சான்றாக காட்டலாம் என்று ரயில்வேத்துறை அனுமதி அளித்துள்ளது.

இதன்படி எம்.ஆதாருக்காக, ஆதார் ஆணையம் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்த ஆப்பை ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள செல் நம்பரில் மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும். அந்த புதிய ஆப்பை டவுன்லோட் செய்து, அதில் உள்ள டிஜிட்டல் வடிவிலான எம்.ஆதாரை ரயில் பயணத்தில் அடையாள சான்றாக பயன்படுத்தலாம்.

இது ரயிலில் அடிக்கடி பயணம் மேற்கொள்வோருக்கு பயனுள்ளதாக அமையும் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.

Related Topics : National News

 

About the author

Related

JOIN THE DISCUSSION