உலகின் நீண்ட பெண் கால்கள்..!

ரஷ்யாவை சேர்ந்த மாடல் அழகி உலகின் நீண்ட கால்கள் உடைய பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்தவர் கேதரீனா லிசினா(29).அவர் 2008ம் ஆண்டில் சீனாவில் நடந்த ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டியில் ரஷ்யா சார்பில் வெண்கலம் வென்றவர்.

அதன் பின்னர் முழு நேர மடலானார். தற்போது கேதரீனா உலகின் நீண்ட கால்கள் உடையவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

6 அடி, 8.77 அங்குல உயரமுள்ள, அவரது வலது கால், 132.8 செ.மீட்டரும், இடது கால், 132.2 செ.மீட்டரும் நீளமானதாக உள்ளது. மேலும் அவர், உலகிலுள்ள பெண் மாடல்களில் உயரமான, பெண் மாடல் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக, ரஷ்யாவை சேர்ந்த, ஸ்வெட்லனா பாங்க்ரடோவா, உலகின், நீளமான கால்கள் உடைய பெண் என்ற சாதனையை பெற்றிருந்தார். அவரது
கால்கள், 132 செ.மீ., நீளம் உடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Topics : International News

 

About the author

Related

JOIN THE DISCUSSION