திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் வித்தியாச கலாச்சாரம்..! இந்தியாவில்தான் இந்த ஆச்சர்யம்!!

0
0

திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆணும், பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது இந்திய கலாசாரத்திற்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், வட இந்திய  பகுதியில் வசிக்கும் மக்கள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வதை ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றி  வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தில் வாழும் கராசியா (Garasia) எனப்படும் பழங்குடி மக்கள் தான் இப்படி ஒரு கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறார்கள்.

அதாவது, இங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு பிடித்த ஆண் அல்லது பெண்ணை தேர்வு செய்து கொள்ளலாம். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக இருவரும் வாழ அவர்களின் சமூகம் அனுமதி அளிக்கிறது. டீன் ஏஜ் பருவத்திலேயே  வாழ்க்கையை தொடங்கிவிடுகின்றனர்.

இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்த போதிய பணம் கிடைத்து விட்டது என்ற நிலை வரும்போது அவர்கள் திருமணம் செய்து  கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழும் ஜோடி குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகும்.


அப்படி குழந்தை பெற முடியவில்லையெனில், இணைந்து வாழ்பவர்கள் பிரிந்து வேறு ஆண் அல்லது பெண்ணை தேர்வு செய்து  கொண்டு அவர்களுடன் சேர்ந்து வாழலாம்.

இணைந்து வாழும் ஜோடி திருமணம் செய்து கொண்டால், மணமகனின் குடும்பம் மற்றும் மணமகள் குடும்பத்துக்கு குறிப்பிட்ட பணத்தை வழங்க வேண்டும்.

இங்கு பெண்களுக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்படுவதால் அவர்கள் வேறு ஆணுடன் வாழ விரும்பினால் அதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

 

இந்த சூழலில் பெண்ணின் வாழ்க்கையில் புதிதாக வரும் ஆண், ஏற்க்கனவே அந்த பெண்ணுடன் வாழ்ந்த ஆணுக்கு அதிக பணம்  கொடுக்க வேண்டியது கட்டாயமாகும்.

இப்படி பெண்களுக்கு அதிக உரிமை அளிக்கப்படுவதால் பெண்கள் பயமில்லாமல் வாழ்வதுடன் இங்கு கற்பழிப்பு, வரதட்சணை  மரணங்கள் மிக குறைவாகவே நடக்கிறது.

இங்கு வசிக்கும் நிர்மல் சிங் என்பவர் கூறுகையில், எங்களை போல மற்ற மக்கள் வாழ்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால்  ஆயிரம் வருடங்களாக நாங்கள் இப்படித் தான் வாழ்ந்து வருகிறோம் என்றார்.

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here