மின்னல் வெட்டியபோது செல்போனில் பேசிக்கொண்டிருந்தவர் பலி!

0
0

திருவனந்தபுரம்: உறவினர் இறுதிமரியாதையில் பங்கேற்ற வாலிபருக்கு இறுதி மரியாதை நடந்துள்ளது.

இப்பரிதாப சம்பவம் கேரள மாநிலம் அடூர் அருகில் உள்ள மூங்கரப்பள்ளி கிராமத்தில் நடந்தது.

அக்கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(30). செல்போன் கடை வைத்துள்லார். உறவினரது இறுதிச்சடங்கில் பங்கேற்க மூங்கரப்பள்ளி வந்தார்.

அப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மின்னல் வெட்டியது. அப்போது ராஜேஷூக்கு ஒரு கால் வந்தது.

அதனை பேசிக்கொண்டிருந்தபோது கடுமையாக வெட்டிய மின்னல் செல்போனை தாக்கியது.

அதில் சம்பவ இடத்திலேயே ராஜேஷ் இறந்துள்ளார். அவருக்கும் அதே மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here