நிலச்சரிவால் 800மீ. ஆழத்தில் புதைந்த பஸ்கள்! விடியோ!!

0
0

நிலச்சரிவில் சிக்கிய இரு பஸ்கள் 800மீட்டார் ஆழத்தில் புதைந்தன.

இமாச்சல பிரதேசத்தில் நேற்று இரவு மண்டி-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்தப் பகுதியில் நேற்று கனமழை பெய்ததால் நள்ளிரவு 1.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் 2 பேருந்துகள் சிக்கின.

ஒரு பேருந்து மனாலியிலிருந்து காத்ராவுக்கும் மற்றொரு பேருந்து மனாலியிலிருந்து சம்பாவுக்கும் சென்றுகொண்டு இருந்தன.

மண்சரிவில் சிக்கிய இரு பேருந்துக்கள் 800மீ ஆழத்தில் புதைந்தது.

பஸ்களில் இருந்த 17பேர் உயிரிழந்தனர் 40 பேரை தேடிவருகின்றனர்.

 

பயணிகள், டீ குடிப்பதற்காக நள்ளிரவில் கோட்ருபியில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த போது இந்தத் துயர சம்பவம் நடைபெற்று உள்ளது.

அம்மாநில முதல்வர் வீரபத்ரசிங் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து, சம்பவத்தை குறித்தும் பாதிப்பு குறித்தும் அங்கு இருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் கருணைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இத்துயர சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here