பாஜக மீது ரூ.1000கோடி ஊழல் புகார்!

பாஜக மீது ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார் லாலுபிரசாத்யாதவ்.
பிகார் மாநிலத்தில் மெகா கூட்டணி முறிந்தது.
ஐக்கியஜனதாதளம், பாஜக இணைந்து ஆட்சியை தொடர்ந்து வருகிறது.
ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட லாலுபிரசாத் பாஜக மீது ஊழல் புகார் கூறியுள்ளார்.

ஊழல்கறை தன்மீது படியவிடமாட்டேன் என்று நிதிஷ் கூறினார்.
ஊழல்வாதிகளுடன் அவர் தற்போது உறவாடிக்கொண்டுள்ளார்.
துணைமுதல்வர் சுஷில்குமார் மோடி அரசு திட்டங்களில் ரூ.1000கோடி மோசடி செய்துள்ளார்.

2005முதல் 2013வரை சுஷில்மோடி நிதியமைச்சராக இருந்தார்.
அப்போது அரசு திட்டங்களுக்கான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தற்போது தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கை மூடிமறைக்க முயற்சிகள் தொடங்கியுள்ளன.
உடனடியாக துணைமுதல்வர் மோடி பதவி விலகவேண்டும்.


இல்லாவிட்டால் ஆகஸ்ட் இறுதிவாரம் கூடும் பேரவை நிகழ்ச்சிகளை முடக்குவோம்.

இவ்வாறு லாலுபிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

About the author

Related

JOIN THE DISCUSSION