தன்னந்தனியாக சுறா மீனை தூக்கி வீசிய பெண்..! வீர விடியோ..!

0
2

நம்ப முடியவில்லை. ஆனால்,உண்மை. ஆஸ்திரேலியாவில் ஒரு பெண் சுறா மீனை தனியாக தூக்கி வீசுகிறார். அந்த விடியோ காட்சிகள் வலை தளங்களில் பரவி அந்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இப்போ அந்த பெண்ணை ‘சுறா வேட்டைக்காரர்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் பகுதியான குரோனுல்லா பகுதியில், கடற்கரை ஓரமாக உள்ள வீட்டில் மெலிசா ஹேத்தியர் என்ற பெண் அவர்களின் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கடற்கரை ஓரமாக உள்ள அவர்கள் வீட்டு நீச்சல் குளத்துக்குள் எப்படியோ ஒரு சுறா மீன் வந்து மாட்டிக்கொண்டு மீண்டும் கடலுக்குள் செல்ல முடியாமல் தவித்து வந்தது.

மெலிசா குடும்பத்தினர், இதை மெலிசாவிடம் கூறினார்கள். அப்புறம் மெலிசாவே சொல்லுவதை கேளுங்கள்:-

‘வீட்டில் உள்ளவர்கள் சுறா மீன் நீச்சல் குளத்துக்குள் இருப்பதை சொன்னார்கள். வீட்டில் உள்ளவர்கள் பயந்தார்கள். கடித்துவிடும். தாக்கி காயப்படுத்தும் என்றார்கள்.

நான் துணிந்து நீச்சல் குளத்தில் இறங்கி நீந்தி,அந்த சுறா மீனை மெல்ல நகர்த்தி ஆழமில்லாத பகுதிக்கு கொண்டு வந்தேன். அங்கு வந்ததும் எனது முட்டிக் காலால் அதன் துடுப்பு பகுதியில் உந்தி கைகளால் இறுகப் பிடித்து தூக்கினேன்.

 

வலுவியது. ஆனாலும் நான் விடவில்லை. தூக்கி கடலில் வீசி விட்டேன்’ என்றார் சிரிப்புடன். அவர் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட். சுறாவால் ஹீரோயின் போல ஆஸ்திரேலியா முழுவதும் பிரபலமாகி விட்டாராம்.

https://youtu.be/QhIw4hQbI-Y

Related Topics :International News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here