எனது வளர்ச்சி பயத்தை ஏற்படுத்துகிறது..!? குஷ்பூ அதிரடி..!

0
0

கட்சியில் எனது வளர்ச்சி தமிழக காங்கிரசில் சிலருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

 


தமிழக காங்கிரசில், நடிகை குஷ்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விரும்பாத தென் சென்னை மாவட்ட தலைவர், தியாகராஜன் கடும் அதற்கு கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், 19 ஆண்டுகளுக்கு பின்னர் காமராஜர் அரங்கத்தில், நேற்று நடந்தது.

கூட்டம் முடிந்த பின், தென் சென்னை மாவட்ட தலைவர், தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறும்போது,’ நடிகை குஷ்பு, 100 ரூபாய் கட்டணத்தை கொடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையைகூட புதுப்பிக்கவில்லை.

ஆனால், அவருக்கு, கட்சியில் மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஏன் அவர், ஐந்து ரூபாய்கொடுத்து, விண்ணப்பபடிவம்கூட வாங்கவில்லை.

திருநாவுக்கரசர், சிதம்பரம், தங்கபாலு, இளங்கோவன், ஆகியோர் கட்டணம் செலுத்தி, அடிப்படை உறுப்பினர் அட்டையை புதுப்பித்துள்ளனர்.

‘நான் பிழைப்பு நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சிக்கு வரவில்லை’ என்று குஷ்பு கூறுகிறார். ஆனால், 2016 சட்டசபை தேர்தலில், வேட்பாளர்களிடம் பணம்வாங்கிக் கொண்டுதான் பிரசாரமே செய்தார். அது குறித்து, டில்லி மேலிடத்திலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், நடிகை நக்மா, 10 காசு கூட வாங்காமல் பிரசாரம் செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.


தியாராஜன் குற்றச்சாட்டு குறித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
கட்சியில் எனது வளர்ச்சி அவருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பயத்திநாள் தான் தியாகராஜன், எனக்கு காங்கிரஸ் உறுப்பினர் அட்டை இல்லை என்று கூறியுள்ளார்.

என்னை நம்பி, காங்கிரஸ் இல்லை; காங்கிரசை நம்பியும் நான் இல்லை. மக்களுக்கும், நாட்டுக்கும் சேவை செய்வதற்காக, காங்கிரசில் சேர்ந்தேன். இளங்கோவன், தலைவராக இருந்தபோதே, நான் உறுப்பினராக சேர்ந்து விட்டேன்.

எனக்கு, தலைவர்கள் சோனியாவும், ராகுலும் தான். மற்றவர்கள் சொல்வதை, நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அதைப் பற்றி கவலைப்பட போவதுமில்லை.
இவ்வாறு குஷ்பு கூறினார்.

Related Topics : Tamilnadu News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here