குல்தீப்பின் மாயாஜாலம்..! முனவீராவின் பேட் பறந்தது..! வீடியோ

0
0

வழக்கமான ஸ்பின் பவுலர்கள் இல்லாத நேரங்களில் தனது தனி திறமைகளைக் காட்டி இந்திய அணியில் வலுவாக கால் ஊன்றியுள்ளார் குல்தீப் யாதவ். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்கள் இல்லாத போது அவர்களின் இடத்தை நிரப்பி
தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார்.

22 வயதான குல்தீப் இலங்கையுடனான T20 போட்டியில் மாயாஜால பந்து வீசி,இலங்கை அணி வீரர் முனவீராவின் பேட்டை பறக்கச் செய்தார். விக்கெட் கீப்பராக நின்ற தோனிக்கு நம்ப முடியவில்லை.

குல்தீப் பந்து வீசியவுடன் அந்த மேஜிக் பந்தை அடிப்பதற்கு முனைவீரா பேட்டை பந்தை நோக்கி திருப்புகிறார். ஆனால், பந்து சரியாக நடு ஸ்டம்பில் பட்டு தெறிக்கிறது. முனவீராவின் பேட்டோ, அவரது கையை விட்டு பறக்கிறது.

முனவீராவும் அதை நம்ப முடியாமல் பார்க்கிறார். இதை போன்ற அதிசயம் நிகழ்த்திய குல்தீப் இந்திய அணிக்கு ஒரு தூண் தான். அந்த அற்புத காட்சிக்கான வீடியோவை பாருங்க.

 

Related Topics : Sports News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here