கோலாலம்பூர் பள்ளியில் தீ விபத்து..! 22 மாணவர்கள் கருகி சாவு..!

கோலாலம்பூர் பள்ளியில் அதிகாலையில் நடந்த தீவிபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் கருகி பலியானார்கள்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இஸ்லாமிய மதம் சார்ந்த பள்ளி, (Darul Quran Ittifaqiyah ) ‛தருல் குரான் இட்டிஃபாகியா’. அந்த பள்ளியில், கோலாலம்பூர் நேரப்படி இன்று காலை 5.40க்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தீ பிடித்த இடத்தில் இருந்து தப்பித்து வெளியே வர முடியாமல் தவித்தனர். இதில் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 24 பேர் பலியானார்கள்.

கருகிய உடல்களை அடையாளம் கண்டுபிடிக்க சிரமம் அடைந்தனர். அதில் 22 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் ஆவர். மாணவர்கள் அனைவரும் 13முதல் 17
வயதுடையவர்கள் ஆவார்கள்.கருகிய உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன

இந்த தீ விபத்து குறித்து கோலாலம்பூர் போலீஸ் கமிஷனர் அமர் சிங் விசாரணை
செய்து வருகிறார்.

Related Topics : International News

 

About the author

Related

JOIN THE DISCUSSION