ஒற்றைக்காலுடன் பிறந்த அதிசய குழந்தை!

0
0

கொல்கத்தா: ஒற்றைக்காலுடன் அதிசய குழந்தை கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேவா சதன் மருத்துவமனையில் பிறந்துள்ளது.

கொல்கத்தா புறநகரில் வசித்து வருபவர் மஸ்குரா பீவி(24). இவர் தலைப்பிரசவத்துக்காக அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார்.

இரு தினங்களுக்குப்பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை பிறந்தது.  அக்குழந்தையை பார்த்த டாக்டர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டனர்.

அக்குழந்தைக்கு ஒரேஒரு கால் மட்டுமே இருந்தது.  இரு கால்களும் இணைந்து மீனின் வால்போன்று இடுப்பு பகுதி காணப்பட்டது. மேலும் அது ஆணா, பெண்ணா என்று அடையாளங்கள் இன்றியும் காணப்பட்டது.

இக்குழந்தை பிறந்ததுமே மூச்சுவிட சிரமம் ஏற்பட்டது. இதனால் டாக்டர்கள் தாயிடம் இருந்து குழந்தையை பிரித்து தனியே பராமரிக்க தொடங்கினர்.

சுமார் 4மணி நேரம் சென்றதும் அக்குழந்தை இறந்தது.  மஸ்குரா பீவி குடும்பத்தாரிடம் இவ்விபரத்தை டாக்டர்கள் தெரிவித்தனர்.

அவர் கர்ப்பகாலத்தில் ஸ்கேன் உள்ளிட்ட எந்த பரிசோதனையும் செய்யவில்லை. அவர் கணவர் கூலித்தொழிலாளி என்பதால் வீட்டில் ஏழ்மையே நிலவி வருகிறது.  கர்ப்பகாலத்தில் அவர் உடல் எடையும் சரியான அளவில் இருந்ததால் டாக்டர்கள் கூடுதல் பரிசோதனைக்கு பரிந்துரைக்கவில்லை.

மஸ்குரா பீவியின் ஒற்றைக்கால் குழந்தை மருத்துவ அதிசயமாக பார்க்கப்படுகிறது.  இந்தியாவில் இதுபோன்ற குழந்தை பிறந்துள்ளது இரண்டாவது முறையாகும். ஜீன்களில் ஏற்பட்ட பிரச்சனையால் இதுபோன்ற குழந்தைகள் பிறக்கின்றன என்று டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும், கர்ப்பகாலத்தில் தாய் சத்தான உணவை எடுத்துக்கொள்ளாததாலும் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக கூறினர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here