‘நான் விளையாடவில்லை என்று யார் சொன்னது..?’ கேப்டன் கோஹ்லி அதிர்ச்சி..!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோஹ்லி உட்பட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று செய்திகள்  வெளியானதில் கேப்டன் கோஹ்லி அதிர்ச்சியடைந்துள்ளார்.

நான் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினேனா? நான் ஆடப்போவதில்லை என்று யார் கூறியது? எங்கிருந்து இது கிளம்புகிறது என்று  எனக்குத் தெரியவில்லை. நான் விளையாட வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால் சொல்லுங்கள். விளையாடாமல் இருக்கிறேன். விளையாடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

விரைவில் ஒருநாள் தொடருக்கான அணித்தேர்வு செய்ய உள்ளோம். எங்கள் மனதில் பல திட்டங்கள் உள்ளன. என்ன மாதிரியான  அணியை உருவாக்க வேண்டும் என்பதைப் பேச விரும்புகிறோம். எனவே, ஒரு கேப்டனாக, இதில் நான் மையப்புள்ளியாக இருக்கிறேன்.

குழுவிடம் என்ன பேச வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்று அதிர்ச்சி கலந்து பேசினார் விராட் கோஹ்லி.

இந்த அணி தேர்வில் பெரிய சவாலாக இருப்பது தோனி, யுவராஜ் சிங் ஆகியோரது தேர்வுதான். ஏனெனில் கே.எல். ராகுல் முழு உடல்  தகுதியுடன் ஆடி வருகிறார். தென் ஆப்பிரிக்காவில் வெற்றி பெற்றவராக மணீஷ் பாண்டே உள்ளார்.

தோனி, யுவராஜ் சிங் ஆடியே ஆக வேண்டும். இந்த கூட்டை கலைத்து விடக்கூடாது என்று கோலி அழுத்தம் கொடுத்தால், ரிஷப் பந்த்,  தினேஷ் கார்த்திக் ஆகியோர் பாண்டே, ராகுல் ஆகியோருக்கு வழி விடவேண்டும். அல்லது ராகுலுக்காக ரஹானே வழிவிட வேண்டும்.  சுரேஷ் ரெய்னாவும் உடல் தகுதி பெற்று விட்டதாகக் கூறியுள்ளார்.

பந்துவீச்சாளர்களில் எந்த சிக்கலும் இல்லை. அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இருவருக்குமே ஓய்வு அளிக்கப்படலாம் அல்லது  ஒருவருக்கு கண்டிப்பாக ஓய்வு அளிக்கப்படும் என்றே தெரிகிறது. குல்தீப் யாதவ் நிச்சயம் அணியில் இடம்பெறுவார். லெக் ஸ்பின்னர்  யஜுவேந்திர சாஹல், ஆல்ரவுண்டர் பாண்டியா ஆகியோரும் அணியில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

 

 

கோஹ்லியே குல்தீப் யாதவை புகழ்ந்துள்ளார் குல்தீப் யாதவிடம் எந்த ஒரு சூழ்நிலையிலும் பந்தை தைரியமாகக் கொடுக்கலாம். எந்த  ஒரு சூழ்நிலையிலும் அவர் பந்து வீச விரும்புவார். நெருக்கமான கள வியூகத்திற்கும் அச்சப்படாமல் பந்து வீசுவார்.

அவர் திறமை மீது  நம்பிக்கை உள்ளவர். தன் திறமையாலேயே பேட்ஸ்மேனை ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர். இது ஒரு மிகப்பெரிய  குணாதிசயம். சைனா மேன் பவுலர் எப்போதுமே எதிர்பாராததை நிகழ்த்தக் கூடியவர்.

எனவே இந்த அணித்தேர்வில் முக்கியமான விஷயம், யார் தேர்வாகிறார்கள் என்பதல்ல, யார் தேர்வு செய்யப்படாமல் விடுபடுவார்கள் என்பது தான்.

Related Topics : Sports News

 

About the author

Related

JOIN THE DISCUSSION