விராட்கோலி, சிகர்தவான்… ஆட்டம்! கொண்டாட்டம்!!

0
0

தென்னாப்ரிக்கா:கிரிக்கெட் வீரர் விராட் கோலி, சிகர்தவான் இருவரும் கேப்டவுண் நகரில் ஆடிப்பாடி புத்தாண்டை வரவேற்றனர்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் இம்மாதம் 5ம் தேதி தொடங்கவுள்ளன.


கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் கேப்டவுன் சென்றுள்ளார். சிகர்தவானும் குடும்பத்துடன் சென்றுள்ளார்.
பகலில் பயிற்சி முடித்து மாலை நேரங்களில் இந்திய வீரர்கள் கேப்டவுண் நகரை சுற்றிப்பார்த்து வருகின்றனர்.


கேப்டவுணில் தற்போது மழை பெய்து வருகிறது. மப்பும் மந்தாரமுமான மாலைவேளையில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் இரு வீரர்களும் நடனமாடினர். உள்ளூர் இசைக்குழுவின் பாடலுக்கு அவர்கள் ஆடியதை  விடியோவாகவும் வெளியிட்டுள்ளனர்.
இந்த விடியோ அதிகமாக வலைவாசிகளால் பகிரப்பட்டு வருகிறது.


சிகர்தவான் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் ஆறவில்லை. எனவே, அவர் கேப்டவுன் முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கவில்லை.
இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தை முரளிவிஜய், ராகுல் தொடங்கிவைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here