கேப்டன் கோலி தேனிலவு கொண்டாட்டம்!

0
0

டெல்லி: கேப்டன் கோலி சொர்க்கத்தில் தேனிலவு கொண்டாடும் படம் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்படும் படமாகி உள்ளது.
இத்தாலியில் உள்ள டஸ்கனி ரிசார்ட்டில், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் கடந்த 11-ம் தேதி, விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்துகொண்டனர்.


இந்தியா – தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான தொடர்போட்டி தொடங்கவிருப்பதால், திருமணம் முடிந்தவுடன், இருவரும் தென்னாப்பிரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது அனுஷ்கா ஷர்மா தன் இன்ஸ்டாகிராமில், இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.


இந்தப் போட்டோ வெளியான 20 நிமிடங்களில் இரண்டு லட்சம் பேர் அப்படம் பிடித்துள்ளது என பதிவு செய்தனர்.


அனுஷ்கா, “சொர்க்கத்தில் இருக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார். ஆனால், அவர் எங்கு இருக்கிறார் என்பதை பதிவிடவில்லை.
ரசிகர்கள் பலரும் “இது இத்தாலியா?” பின்லாந்தா அல்லது ‘ஸ்விட்சர்லாந்தா’ என கமென்ட்களில் கேட்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here