மலையாள திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்தது…! சொல்கிறார் நடிகை பாவனா..!

நடிகை பாவனா செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் தனது மலையாள படஉலக அனுபவத்தை பற்றி கூறினார்.

தமிழில் சித்திரம் பேசுதடி திரைப்படமூலம் பாவனா அறிமுகமானார். இவர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த ‘ஸ்நேக்பாபு’ பட காமெடி நல்ல பிரபலமானது.

நடிகை பாவனா,அஜித்துடன் அசல் படத்திலும், ஜெயம்ரவியுடன் தீபாவளி படத்திலும் அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்தவர்.

மேலும்,தீபாவளி படத்தில் யுவன் சங்கர்ராஜா இசையில் வெளியான ‘போகாதே.. போகாதே..’ என்ற பாடல் இவருக்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

இப்படி பரபரப்பாக இருந்த பாவனாவுக்கு தமிழில் வாய்ப்பு இல்லாமல் போனது. இதைத்தொடர்ந்து, மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது மலையாள சினிமா என்பது ஆணாதிக்கம் நிறைந்தது என்றார்.


மலையாளத்தில் தயாரிக்கப்படும் படங்கள் ஆண்களை மையமாக வைத்துத்தான் எடுக்கப்படுகிறது. பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அங்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

About the author

Related

JOIN THE DISCUSSION