ஐந்து பேருக்கு உயிரளித்த அபூர்வ மனிதர்!

0
3

கொச்சியை சேர்ந்த பினு கிருஷ்ணன்(34) மூளைச்சாவால் மரணமடைந்தார்.

அவர் உடலில் இருந்து பெறப்பட்ட உறுப்புகள் 5பேருக்கு பொருத்தப்பட்டு வாழ்க்கை அளிக்கப்பட்டது.

கொச்சி மப்ரேயில் வீடு பகுதியில் வசித்து வந்தவர் பினுகிருஷ்ணன்.

தலையில் அடிபட்டதால் இவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் கடந்த 14ம் தேதி மூளையில் ரத்தக்கசிவுக்காக சிகிச்சைக்கு சேர்ந்தார்.

அவர் இறந்ததை தொடர்ந்து அவரது மனைவி சினி, சகோதரர் ஆகியோர் பினுவின் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தனர்.

பினுவின் இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள், கணையம் ஆகிய உறுப்புகள் பிரிக்கப்பட்டன.

இதயம் கோழிக்கோடு மெட்ரோ மருத்துவமனையில் ஒருவருக்கு பொருத்தப்பட்டது.

கிட்னி மற்றும் கணையம் அம்ரிதா மருத்துவ கல்வி நிலையத்தில் இருவருக்கு பொருத்தப்பட்டன.

தீபாவளி தினத்தன்று அனைவரும் பண்டிகை கொண்டாட்டத்தில் இருக்க பினு ஐந்து பேருக்கு வாழ்வு அளித்து ஜோதியாக ஒளிர்ந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here