காஷ்மீர் பிரச்சனை: பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

0
0

இந்தியாவின் பலவீனமாக காஷ்மீரை உருவாக்குகிறது என்று மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார் ராகுல்காந்தி.

சென்னையில் கருணாநிதியை சந்தித்த பின் ராகுல் அளித்த பேட்டி:

இந்தியாவின் பலம் காஷ்மீர்.

அதனை பலவீனமாக மத்திய அரசு மாற்றி வருகிறது.

கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் நிலைமை அத்துமீறி சென்றுகொண்டிருக்கிறது.

ஆளும் கூட்டணி கட்சிகளான பாஜகவும், பிடிபி-ம் ஒன்றையொன்று குற்றம் சாட்டுகின்றன.

இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய வெளியே வர மக்கள் வர அச்சப்படுகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் அருண்ஜெட்லி என்னை சந்தித்தார்.

காஷ்மீர் நிலைமை குறித்து எனது கவலைகளை தெரிவித்தேன்.

அவர் அதையெல்லாம் மறுத்தார்.

ஆனால், இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காஷ்மீரில் எப்பாடுபட்டாவது அமைதியை நிலை நிறுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசு  தொடர்ந்து தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

காவல்துறையும், பாதுகாப்பு அமைப்புகளும்  தவறான தலைமை அமைந்ததால்தான்  பாதுகாப்பில் குளறுபடி என குற்றம்சாட்டுகின்றனர்.

மத்திய அரசும், பிரதமரும் வெற்று வாக்குறுதிகளை கூறி காஷ்மீரில் அமைதி திரும்புகிறது என கூறி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here