கேஜரிவால் மீது புதிய புகார்: பேட்டியின்போது மயங்கிவிழுந்தார் கபில்மிஸ்ரா

0
0

டெல்லி முதல்வர் மீது புதிய மோசடி புகார் கூறிய முன்னாள் அமைச்சர் கபில்மிஸ்ரா பேட்டியின்போது மயக்கமுற்றார்.

மோசடி குற்றச்சாட்டின்பேரில் டெல்லி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார் கபில்.
அவர் முதல்வர் கேஜரிவால் அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் ரூ.2கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் கூறினார்.
மேலும், அமைச்சர்களின் வெளிநாட்டுப்பயணம் குறித்து விளக்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்துவந்தார்.

இன்று செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
தேர்தல் ஆணையத்தை கேஜரிவால் ஏமாற்றினார் என்றார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த பணத்தை பல போலிகம்பெனிகள் பெயரில் கேஜரிவால் மாற்றினார்.

தனியார் வங்கியில் அந்நிறுவனங்களுக்கு கணக்கு வைத்து கட்சிப்பணத்தை மோசடிசெய்தார் என்றார்.
2013-14, 2014-15ம் ஆண்டுகளில் கட்சிக்கு ரூ.45கோடி நன்கொடை கிடைத்தும் ரூ.20கோடி மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

அது தொடர்பான காசோலை ஆதாரங்களையும் காட்டினார்.
அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார்.
அவர் ராம் மனோகர் லோகியா மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here