போலீஸ் நிலையத்தில் தடபுடல் திருமணம்! விடியோ!!

0
0

உத்தரப்பிரதேசம்: உ.பி. மாநிலத்தில் உள்ள கனோஜ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் தம்பதிக்கு தடபுடல் திருமணம் நடைபெற்றது.

கனோஜ் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் இத்தம்பதிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முகூர்த்த நேரம் நெருங்கிவரும் வேளையில் கல்யாண கோஷ்டிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதில் மணமகள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மணமகன் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அடித்துவிட்டார்.

இதனால் விவகாரம் பெரிதானது. இரு தரப்பும் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் செய்தது.

அவர்களை எப்படி சமாளிப்பது என்று கல்யாண வீட்டினர் தடுமாறினர். கடைசியில் புதுமண தம்பதிகளோடு போலீஸ் ஸ்டேஷன் சென்றனர்.

உறவினர்கள், போலீசார் முன்னிலையில் திருமணம் நடந்தது.

இதனை புகார் கொடுக்கவந்த இரு தரப்பும் எதிர்பார்க்கவே இல்லை.  அனைவரும் சேர்ந்து புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  போலீசாரும் இரு தரப்புக்கும் அறிவுரை கூறி சுமுகமாக செல்லுமாறு அறிவுறுத்தினர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here