அனுதாபம் மட்டும் போதுமா ஆண்டவரே?!

0
0

சென்னை: கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நடிகர் கமலஹாசன் அனுதாபங்கள் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புயல் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.  சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சரிந்தன.  நாகர்கோவிலில் மின்சார டிரான்ஸ்பார்மரும் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சரிந்து விழுந்தது.
மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. வீடுகளும் சேதமடைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஓகி புயலால்  4 பேர் பலியாகி உள்ளனர். கன்னியாகுமரியில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.இதுகுறித்து டுவிட்டரில் கமல்ஹாசன் மழையில் மிதக்கிறது கன்யாகுமரி மாவட்டம். இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என கூறி உள்ளார்.

கோவில் சொத்துக்கள் கொள்ளை, கோவை ரகு மரணம் குறித்தும் கமல் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மழையால் பாதித்த சென்னை மக்களுக்கு உதவ வேண்டும் என்று ரசிகர்களை கேட்டுக்கொண்ட கமல், குமரி மக்களுக்கு அனுதாபத்தை மட்டும் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here