பாஜகவை சீண்டும் கமல்!

பாரதிய ஜனதா கட்சியை சீண்டியுள்ளார் நடிகர் கமலஹாசன்.

அரசியல் குறித்து நடிகர் கமலஹாசன் அடிக்கடி டுவிட் செய்து வருகிறார்.

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற குழந்தைகள் மரணம் தொடர்பாக மத்திய அரசு, பாஜக-வை அவர் சீண்டியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் குழந்தைகள் இறந்த சம்பவம் தொடர்பாக நோபல் பரிசுபெற்ற சத்யாத்ரி டுவிட் செய்துள்ளார்.

அதில், உ.பி. மருத்துவத்துறையில் பல ஆண்டுகளாக ஊழல் நிலவுகிறது.                                             அதனால் இச்சோகம் நிகழ்ந்துள்ளது.

முதல்வர் தலையிட்டு ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்தது துயரம் அல்ல. படுகொலை.

சுதந்திரம் அடைந்து 70ஆண்டுகளாகியும் நமது குழந்தைகளுக்கு அதனால் என்ன பயன்?

-என்று சத்யாத்ரி டுவிட் செய்துள்ளார்.

இதனை தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார் நடிகர் கமலஹாசன்.

 

About the author

Related

JOIN THE DISCUSSION