கபடி விளையாட்டைப்பார்த்து மெர்சலாயிட்டேன் என்று தெரிவித்தார் சச்சின் டெண்டுல்கர்.
கபடி விளையாட்டில் லீக் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை தலைவாஸ் என்ற அணிக்கு சச்சின், நிம்மகட பிரசாத், அல்லு அரவிந்த், அல்லு அர்ஜூன், ராம் சரண் ஆகியோர் உரிமையாளர்களாக உள்ளனர்.
இந்த அணியின் விளம்பர தூதராக நடிகர் கமல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணி வீரர்களுக்கான ஆடை அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசினார் சச்சின் டெண்டுல்கர்.
2ஆண்டுகளுக்கு முன் கபடி போட்டியை மும்பையில் பார்த்தேன்.
அப்படியே அசந்துவிட்டேன்.
என்ன ஒரு வேகம்! மைதானம் முழுவதும் ஒரு விசை சூழப்பட்டிருந்தது.
கபடியில் ஆற்றலும், விறுவிறுப்பும் அபிரிதமாக உள்ளது.
இந்தியா இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடு.
உடல் எடையால் பாதிக்கப்படும் இளைஞர்கள் உள்ள நாடு பட்டியலில் 3ம் இடத்தில் இந்தியா உள்ளது.
எல்லோரும் ஏதாவது ஒரு விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எனது அணியில் தற்காப்பு வீரராக தோனியையும், ரைடராக சங்கர் மகாதேவனையும் தேர்வு செய்வேன் என்று விளையாட்டாக கூறினார் சச்சின்.
சங்கர் மகாதேவனைத் தேர்வு செய்வேன் என்றார் சச்சின்