சண்டைக்கு வந்தார்! உள்ளே தள்ள வேண்டியதாச்சு!!

0
0

தானாகவே வலிய சண்டைக்கு வந்ததால் நீதிபதி கர்ணனுக்கு தண்டனை விதிக்க வேண்டியதாயிற்று என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர் தலைமறைவானார்.

கோவையில் பதுங்கியிருந்த அவரை கொல்கத்தா போலீசார் கைதுசென்றனர்.

ஜாமீன் கோரியும், தனது தண்டனையில் இருந்து விடுவிக்குமாறும் கர்ணன் கோரினார்.

உச்சநீதிமன்றத்தில் மனுச்செய்தார். 

மனு நிராகரிக்கப்பட்டது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பில்,

 

நீதிபதி கர்ணன் மீதான வழக்கு துரதிருஷ்டவசமானது.

இது, பணியில் உள்ள நீதிபதிக்கு எதிரான நடவடிக்கை என்பதால், உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

எங்கள் முடிவை எவ்வித அச்சமோ, விருப்பமோ, தீய எண்ணமோ இல்லாமல் பதிவு செய்துள்ளோம்.

நீதிபதி கர்ணனுடன் பேசிய மனநல மருத்துவர்கள், எவ்வித அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை.

அவர்கள் எதுவும் கூறாததால், நீதிபதி கர்ணன் கூறியபடி, அவர் நல்ல மனநிலையுடனும், உடல்நிலையுடனும் இருப்பதாக ஏற்றுக்கொள்கிறோம்.

நீதிபதி கர்ணனின் விரும்பத்தகாத செயல்களும், நடத்தையுமே அவருக்கு தண்டனை விதிக்க காரணம்.

அவரது பேச்சுகள், நீதித்துறையை நகைப்புக்கு இடமாக்கி விட்டது.

இந்த கோர்ட்டு அவ்வப்போது பிறப்பித்த உத்தரவுகளை தொடர்ந்து, அவரது நடத்தை வலிந்து சண்டைக்கு வருவது போல் இருந்தது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here