சரணடைய மாட்டேன்: நீதிபதி கர்ணன் பிடிவாதம்

0
0

உச்சநீதிமன்றம் அளித்த சிறைத்தண்டனை வழக்கை திரும்ப பெற்றுக்கொள்ள நீதிபதி கர்ணன் தீவிரமாக முயன்று வருகிறார்.

தனக்கு மனநல பரிசோதனை செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டார் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன்.

இதனைத்தொடர்ந்து அவரது உத்தரவுகள் அனைத்துக்கும் தடைபோட்ட உச்சநீதிமன்றம் அவருக்கும் 6மாதம் சிறைத்தண்டனை வழங்கியது.

இத்தண்டனை உத்தரவை திரும்பப்பெற்றுக்கொள்ள அவர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார்.
அம்மனு ஏற்கப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


அவரது மகன் எஸ்.கே.சுகன் குடியரசுத்தலைவர் மாளிகையில் நேரில் இதுதொடர்பாக மனு அளித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது தந்தையின் தண்டனை உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும்.
அவர் சரணடைய மாட்டார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here