ஜான்ஸ்சன் பவுடர் உபயோகித்தால் புற்றுநோய் வரும் அபாயம்!

பிரபல நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் குழந்தைகளுக்கான பவுடரை உபயோகித்தால் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது.

அமெரிக்காவி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த பெண் ஈவா.

60வயதாகும் இவர் 1950ம் ஆண்டு முதல் தினமும் ஜான்சன் பவுடர் உபயோகித்துள்ளார்.

அந்த பவுடரில் கேன்சர் நோய் உருவாக்கும் அபாயமுள்ளது அவருக்கு தெரியவில்லை.

இந்நிலையில் அவர் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கருப்பையை அகற்ற வேண்டும் என்று முடிவுசெய்தனர்.

இந்நிலையில், ஈவா வுக்கு கேன்சர் நோய் பவுடர் உபயோகித்ததால் ஏற்பட்டது தெரியவந்தது.

உடனடியாக அவர்  ஜான்சன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குத்தொடர்ந்தார்.

நீதிமன்றம் ஈவாவுக்கு 417மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

இத்தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்லவுள்ளோம் என்று ஜான்சன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரி கரோல் குட்ரிச் தெரிவித்துள்ளார்.

About the author

Related

JOIN THE DISCUSSION