ஜியோவின் சர்வதேச சாதனை!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சர்வதேச சாதனையை நடத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ நிறுவனம் 4ஜி சேவையை வோல்ட் தொழில்நுட்பத்தில் வழங்கி வருகிறது.
13கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி இந்தியாவில் நம்பர்1 இடத்தை பிடித்துள்ளது.


இதனால் மொபைல் டேட்டா பயன்படுத்துவதில் உலகநாடுகள் பட்டியலில் 155வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது முதலிடம் பிடித்துள்ளது.
உலகிலேயே ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் மட்டுமே ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக 100 கோடி ஜி.பி. அளவிலான டேட்டாவை வழங்கி வருகிறது.


ஜூன் மாத இறுதி வரையில் ஜியோ நெட்வொர்க் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 12.36 கோடியாக இருந்ததாக டிராய் தகவல் வெளியிட்டிருந்தது. முன்னதாக அக்டோபர் மாதம் வரை 11 கோடி வாடிக்கையாளர் ஜியோவில் இணைந்தனர்.

மாதத்துக்கு சராசரியாக 2.9 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைந்துள்ளனர். ஜூன் மாதம் இறுதியில் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 12.36கோடி ஆகும்.


ரிலையன்சின் மை ஜியோ ஆப் 100மில்லியனுக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.
பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஆப் 10மில்லியனை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்ட ஆப் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

About the author

Related

JOIN THE DISCUSSION