ஜெ. பங்களாவில் திடீர் தீ

0
2

ஜெயலலிதா ஓய்வெடுக்க கட்டப்பட்ட சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுதாவூரில் ஜெயலலிதா பங்களா ஒன்றை கட்டினார்.
2016 பேரவை தேர்தலுக்கு முன்னர் அந்த பங்களாவை பலகோடி செலவில் புதுப்பித்தார்.
பங்களா கட்டுவதற்கான இடம் தேர்வு தொடர்பாக சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக வழக்கும் நடந்துவந்தது.

இந்நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து சிறுதாவூர் பங்களாவுக்கு யாரும் செல்வதில்லை.
அப்பங்களாவில் காவலர்கள் மட்டுமே உள்ளனர்.
பராமரிப்பின்றி உள்ளதால் பங்களாவின் புல்வெளிப்பகுதியில் சுமார் 3அடி உயரத்துக்கு கோரைப்புற்கள், முள்செடிகள் காணப்படுகின்றன.

தற்போது வெயில் அதிகமாகியுள்ளதால், சூட்டினால் செடிகள் தீப்பற்றி எரிந்தன.
இதுதொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்துவந்து தீ பரவாமல் தடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here