சந்திரபாபு நாயுடுவுக்கு தூக்கு! ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசம்!!

0
0

 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தூக்கில் போட்டாலும் தவறில்லை என பிரச்சாரகூட்டத்தில் ஜெகன் மோகன் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் நந்தியாலா சட்டமன்ற தொகுதிக்கு வரும் 23 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தொகுதியில் தெலுங்கு தேசம்கட்சி மற்றும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் போட்டியிடுகின்றன.

இரு கட்சிகளும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தில், “சந்திரபாபு நாயுடுவை நடுரோட்டில் சுட்டாலும் தவறில்லை என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

 

இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து தேர்தல் ஆணையத்திற்கு ஜெகன் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தீபகுண்ட்லா என்ற நகரில் பேசினார்.

அப்போது கடந்த 3 ஆண்டுகளாக ஆந்திராவில் மிகவும் மோசமான ஆட்சி நடந்து வருகிறது. இதனால் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைத் தூக்கிலிட்டாலும் தவறில்லை” என்று கூறினார்.

இக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here