ஈராக் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 335பேர் பலி!! விடியோ!!!

0
2

பாக்தாத்: ஈராக் எல்லைப்பகுதியில் நேற்று நள்ளிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 335பேர் இறந்ததாக தெரியவந்துள்ளது.
ஈரான் – ஈராக் எல்லைப்பகுதியில் பாக்தாத்தில் இருந்து 350கிமீ தூரத்தில் உள்ள ஹலாப்ஜா நகரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3என்று பதிவாகி உள்ளது.
எல்லைப்பகுதியில் சுமார் 130 கி.மீ தூரத்துக்கு இந்நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கி 320பேர் இறந்துள்ளனர். 2ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலநடுக்கம் சவுதி அரேபியா, குவைத் மற்றும் அரபுநாடுகளிலும் உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் எண்ணெய்க்கிணறுகள் உள்ளன. அவற்றில் வேலைபார்த்துவந்த வெளிநாட்டவர்கள் குறித்து விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

நிலநடுக்கத்தால் வீடுகளில் வசிப்போர் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ள காட்சிகளைக்கொண்ட விடியோ:

நட்சத்திர ஓட்டல் வரவேற்பறையில் இருந்தவர்கள் உயிர்பிழைக்க ஓடும் காட்சி.

வணிகமால் ஒன்றில் நிலநடுக்கத்தால் பொருட்கள் சரிந்து விழுகின்றன. மக்கள் வணிகவளாகத்தை விட்டு வெளியேறும் காட்சி.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here