இந்தியாவுக்கான வெற்றி..! தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள் லண்டனில் முடக்கம்..!

0
2

இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த பெரிய வெற்றிகளில் இதுவும் ஒன்று என்று சொல்லும் அளவுக்கு இங்கிலாந்து அரசு மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியான தாவூத் இப்ராஹிமின் சொத்துக்களை முடக்கி வைத்துள்ளது.

2015ம் ஆண்டில் இங்கிலாந்து அரசிடம் தாவூத் குறித்த கோப்பினை இந்தியா வழங்கி இருந்தது. கடந்த மாதம் (ஆகஸ்ட்) 22ம் தேதி பி.டி.ஐ., ஒரு தகவலை வெளியிட்டு இருந்தது. அதில், தாவூத் இப்ராஹிம் இன்னும் இந்திய குடிமகனாக மட்டுமே உள்ளார்.


ஆனால்,இங்கிலாந்தில் அவருக்கு 21 பெயர்களில் நிதி பரிமாற்றம் நடந்துள்ளது. அந்த நிதி பரிமாற்றங்களில் பாகிஸ்தானில் மூன்று முகவரிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.பாகிஸ்தானில் அவரது முகவரி ; காஸ்கர் தாவூத் இப்ராஹிம், வீட்டு எண் 37, 30,வது தெரு, டிஃபென்ஸ் ஹௌசிங்
அதாரிட்டி,கராச்சி,பாகிஸ்தான் என்ற முகவரி,

நூராதாபாத்,கராச்சி,பாகிஸ்தான்(மலைபிரதேசத்தில் உள்ள ஒரு பங்களா) என்ற முகவரி  மற்றும் வைட் ஹவுஸ்,சவுதி மாஸ்க் அருகில்,கிளிஃப்டன், கராச்சி,பாகிஸ்தான்.
இப்படி 21பெயர்களில் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று லண்டனில் தாவூத் இப்ராஹிம்முக்கு சொந்தமான சொத்துக்களை இங்கிலாந்து
அரசு முடக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், தாவூத்  இப்ராஹிமின் வங்கி கணக்குகளும் முடக்கப்படும். மேலும் அவருக்கு சொந்தமான அசையா சொத்துக்கள் அரசால் பறிமுதல் செய்யப்படும்.

இங்கிலாந்தின் இந்த நடவடிக்கை இந்திய ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Related Topics : International News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here