நபிகள் தொடர்பாக விஷம கருத்து! இந்தியருக்கு துபாயில் சிறை!!

0
0

முகமது நபிகள், இஸ்லாம் தொடர்பாக விஷம கருத்திட்டிருந்த இந்தியருக்கு துபாய் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த 38வயது வெல்டிங் தொழிலாளர் துபாயில் பணியாற்றி வந்தார்.

அவர் தனது முகநூல் பக்கத்தில் மதம் தொடர்பாகவும், இறைதூதர் தொடர்பாகவும் விஷம கருத்தை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவருடன் பணியாற்றிவந்த மற்றொரு நபர் போலீசில் புகார் செய்தார்.

கடந்த நவம்பர் மாதம் அல் ரஷியாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்நபரிடம் விசாரித்தனர்.

அவர் தந்து பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டது என்றும், அப்பதிவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்தார்.

விசாரணையில், அவரே தனது பதிவுகள், சுயவிபரங்களை முகநூலில் அழித்தது உறுதிசெய்யப்பட்டது.

அத்தொழிலாளி மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்தது.

நீதிமன்றம் தெய்வநிந்தனை செய்தது தொடர்பாக இந்திய தொழிலாளருக்கு ஓராண்டு சிறை, 5லட்சம் திராம் அபராதம் மற்றும் அவரை நாடு கடத்தவேண்டும் என்று உத்தரவிட்டது.

மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்திய தொழிலாளி சிறையில் அடைக்கப்பட்டார்.

2015ம் ஆண்டில் இருந்து தெய்வநிந்தனை, மதம், இனம், மொழி பேதங்களை ஏற்படுத்துவது கடுமையான குற்றம் என்றும் அதற்கான தண்டனைகளும் துபாய் அரசால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here