இந்திய மாணவியிடம் பாக். வம்பு செய்தது ஏன்? பரபரப்பு பின்னணி!

0
0

லாகூர்:பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இந்திய மாணவியின் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து டுவிட்டரில் வெளியிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து புகார்கள் குவியவும் அக்கணக்கை டுவிட்டர் முடக்கியது.

சர்வதேச அளவில் இச்சம்பவம் பாகிஸ்தானுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் இவ்வாறு நடந்துகொண்டதற்கான காரணம் குறித்து பரபரப்பு பின்னணி தகவல் கிடைத்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள மதான் நகரில் அப்துல்வாலிகான் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு பத்திரிகையியல் துறையில் உயர்கல்வி படித்துவந்தார் மாஷால்கான்.

பல்கலைக்கழகத்தில் நடந்துவந்த பல முறைகேடுகளை இவர் தொடர்ந்து எதிர்த்து வந்தார். நண்பர்களுடன் சேர்ந்து பலகட்ட போராட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுவந்தார்.

இந்நிலையில், அவர் மத நிந்தனை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டார். கடந்த ஏப்ரல் 13ம் தேதி ஹாஸ்டலில் இருந்த அவரை ஒரு கும்பல் தரதரவென்று இழுத்துவந்தது.

பல்கலைக்கழக வளாகத்தில் அவர் சரமாரியாக அடித்துக்கொல்லப்பட்டார்.  இச்சம்பவம் தொடர்பாக வழக்கு நடந்துவருகிறது.

இச்சம்பவத்துக்கு நீதிகேட்டு மாணவர்கள் மத்தியில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.   மாஷால்கானுக்கு ஆதரவாக இரு கேஷ்டேக்குகள் இணையத்தில் இடப்பட்டுள்ளன. 

        இந்த கேஷ்டேக்கை டெல்லி மாணவி பயன்படுத்தி உள்ளார். அவரது வேண்டுகோளின்படி பலரும் இந்த கேஷ்டேக் பயன்படுத்திய போட்டோக்களை பயன்படுத்தி இணையத்தில் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதனால் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அந்த மாணவியின் புகைப்படத்தில் தகிடுதத்தம் செய்து மாட்டிக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here