உடல் பரிசோதனைக்கு ஸ்கேன் வேண்டாம்! கேமரா போதும்!!

மருத்துவ பரிசோதனைக்காக எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கும் தேவை இனி இருக்காது.

உடலை ஊடுருவிப் பார்க்கும் மருத்துவ கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் கெவ்தாலிவால் தலைமையிலான மருத்துவக்குழு கண்டுபிடித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் என்ற பல்கலைக்கழகத்தின் மூலக்கூறுத் துறையைச் சேர்ந்த பேராசிரியரும், விஞ்ஞானியாக உள்ளார் கெவ் தாலிவால்.

 

புதிய கேமராவை ஃபோட்டான்கள் என்று அழைக்கிறார்கள். இந்த போட்டான்கள் உடலில் உள்ள தனிப்பட்ட துகள்களைக் கண்டறியும்.

திசு வழியாகக் கடந்து செல்லும் ஒளி உறுப்புகளை படம்பிடித்து காட்டுகிறது.இந்த கேமரா  பயன்படுத்தினால் எண்டோஸ்கோப்  சிகிச்சையும் தேவையில்லாமல் ஆகும்.

இந்த கேமராவை வணிக பயன்பாட்டுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

About the author

Related

JOIN THE DISCUSSION