இந்தியா த்ரில் வெற்றி!

0
0

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
கான்பூர் நகரில் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சினை தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா (147) ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 18 பவுண்டரிகள் அடங்கும்.
அவருடன் இணைந்து விளையாடிய தவான் (14) ரன்களில் அவுட்டானார்.
ரோகித்துடன் விளையாடிய கேப்டன் கோஹ்லி 113 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.ரோகித் மற்றும் கோஹ்லி ஜோடியாக 230 ரன்கள் வரை விளையாடினர்.
2வது விக்கெட் 41.2வது ஓவரில் ரோகித் ஆட்டமிழந்தார்.

கோஹ்லி உடன் ஹர்தீக் பாண்டியா ஜோடிசேர்ந்து 8ரன்களில் வெளியேறினார்.
தோனி (25), ஜாதவ் (18) ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கார்த்திக் (4) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா (147) ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 18 பவுண்டரிகள் அடக்கம்.

வெற்றிக்கு 338ரன்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து வீரர்கள் குப்தில், மன்றோ களம் இறங்கினர்.
குப்தில் 10ரன்களிலும் மன்றோ 75ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து ஆடிய வில்லியம்சன் (64), டெய்லர் (39), லாதம் (65) நிக்கோல்ஸ் (37) மற்றும் சாண்ட்னர் (9) ரன்களில் அவுட்டாயினர்.

நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

picture courtesy: twitter/icc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here