ஆஸி.வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட இந்திய ரசிகர்கள்..!

ஆஸ்திரேலிய அணி வீர்கள் திரும்பிய பேருந்து மீது கள் வீச்சில் ஈடுபட்ட ரசிகர்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இந்திய பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டி அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தி பார்சபரா மைதானத்தில் நடந்தது, அதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கவுகாத்தி கிரிக்கெட் ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது கற்களை வீசி தாக்கினர். ஆனால், அதிர்ஷ்டவசமாக யார்க்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தை சுழல் மன்னன் அஷ்வின் மற்றும் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், கவுகாத்தி ரசிகர்கள், 100க்கும் மேற்பட்டோர் தங்களை மன்னித்து விடும்படி ஆஸ்திரேலிய வீரர்களை கேட்டு கையில் பதாகை ஏந்தி அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் முன்பு நின்றனர்.

சமூக வலை தளங்களிலும் மன்னிப்புக் கோரி பதிவிட்டுள்ளனர். தற்போது இந்திய ரசிகர்கள் மன்னிப்பு கேட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

Related Topics : Sports News

 

About the author

Related

JOIN THE DISCUSSION