முதல் டக்.அவுட்! குவஹாத்தியில் ஏமாற்றினார் விராட்கோலி!!

0
3

விறுவிறுப்பாக துவங்கிய இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் டி.20போட்டியில் கேப்டன் கோலி ’ஓ’ போட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
குவஹாத்தியில் இந்தியா-ஆஸி. அணிகளுக்கு இடையே டி.20 இரண்டாவது போட்டி நடந்தது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார்.


ஆடுகளம் பேட்டிங்கிற்கு அதிக அளவில் ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

முதல் ஓவரை பெரேன்டர்ஃப் வீசினார். முதல் பந்தை ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். ஆரம்பமே அமர்க்களம்தான், இந்தியா அதிக ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காத ரோகித் 3-வது பந்தில் எல்.பி.டபிள்.யூ. ஆனார்.


அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி இரண்டாவது பந்தை டெலிவரிலைனை தாண்டி எதிர்கொள்ள முயற்சித்தார்.
அப்போது கோலியின் பேடில் பந்துபட்டு எழும்பிச்சென்றது. அப்பந்தை அபாரமாக பேரண்டர்ப் கேட்ச் பிடித்தார்.
கோலி விளையாடும் 52வது கிரிக்கெட்போட்டி இது. இதுவரை அவர் டக்.அவுட் ஆனது இல்லை.
கவுகாத்தி ஆடுகளம் அவரை முதன்முறையாக கவிழ்ந்த முகத்துடன் பவுண்டரி திரும்ப வைத்துள்ளது.                                                                                                                                                             டி.20போட்டிகளில் 5முறை மேன் ஆப்த மேட்ச் பட்டம் பெற்றவர். 48இன்னிங்க்ஸ்களில் 199பவுண்டரி, 35சிக்சர்கள் குவித்தவர் விராட் கோஹ்லி.

பெரேன்டர்ஃப் நான்கு விக்கெட்டுக்களும், சம்பா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.                              இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியாவுக்கு 119ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here