இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி..!

இந்திய அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்திய அணி விராட் கோலி தலைமையில் இலங்கையில் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி2௦ போட்டி விளையாடியது. இதில் 3 டெஸ்ட், மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் வென்றது.

இந்நிலையில் நேற்று இந்திய,இலங்கை அணிகளுக்கு இடையே கொழும்புவில் நடந்த டி-2௦ போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

இந்திய அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி2௦ போட்டிகள் என்று அபாரமாக விளையாடிய இந்திய அணி 9-௦ என்று விதத்தில் 1௦௦ சதவித வெற்றியை பெற்றுள்ளது.

இந்திய அணி வெளிநாடுகளில் பங்கேற்ற சர்வதேச போட்டிகளில், இலங்கையில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்திய அணி இலங்கை அணியுடன் விளையாடும் போட்டிகள் எப்போதும் சவாலாகவே இருக்கும். ஆனால், இந்த முறை 9-௦ என அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு இந்திய அணியின் பலமா அல்லது இலங்கை அணியின் பலவீனமா அவர்களின் நம்பிக்கையின்மையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

About the author

Related

JOIN THE DISCUSSION