இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டிலும் கூட இணையாதாம்

0
0

பாகிஸ்தானும் இந்தியாவும் நேரடி கிரிக்கெட்போட்டி விளையாடும்  பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல் அளித்த பேட்டி:

தீவிரவாதத்தையும், கிரிக்கெட்டையும் எப்படி ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியும்.

எல்லையில் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் பாகிஸ்தான் நடவடிக்கை உள்ளது.

ஒருவேளை இரு அணிகளும் விளையாடினால் அதனை கட்டுப்படுத்தமட்டோம்.

இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் செல்ல விருந்த இந்திய அணியின் பயணம் ரத்தாவது உறுதியாகி உள்ளது.

இந்தியாவுடன் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் துவக்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருகிறது.

ஆனால் இருநாடுகளில் மட்டுமின்றி வேறு எந்த நாட்டிலும் கூட பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம் என மத்திய அரசு கூறி அதிர்ச்சி அளித்துள்ளது.

அதேசமயம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவும்-பாகிஸ்தானும் விளையாடுவதில் எந்த தடையும் இருக்காது என கூறப்படுகிறது.

இரு அணிகளும் பங்கேற்கும் போட்டிகளை நடத்துவது பற்றி இந்திய கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டும் துபாயில் முக்கிய ஆலோசனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here