இந்தியாவை எதிர்கொள்ள அணு ஆயுதம்…! பாக்., பிரதமர் பகீர் தகவல்…!

0
0

இந்தியத் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் குறுகிய தூரத்தில் பாய்ந்து தாக்கும் அணு ஆயுதங்களை உருவாக்கி உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் கூறி உள்ளார்.

பாகிஸ்தானின் பிரதமர் ஷாஹித் அப்பாஸி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க்கில் செய்தியாளர்களை நேற்று அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை கடந்த 5௦ ஆண்டுகளாக பாதுகாப்பாக வைத்து உள்ளது. இது குறித்து எந்த நாடும் கவலைப் பட தேவையில்லை என்று அவர் கூறினார்.

மேலும், இந்திய ராணுவம் மறைமுகமாக போர் உத்தியை செய்து வருகிறது. அவற்றை எதிகொள்ளும் வகையில் பாகிஸ்தான் அரசு குறுகிய தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்களை உருவாக்கி உள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here