20ஓவரில் இலங்கையை அதிரவைத்த இந்திய அணி!

0
0

கொல்கத்தா: இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதல் டி20 போட்டியில் இன்று விளையாடியது.
கட்டாக் நகரில் நடைபெற்ற விளையாட்டில், டாஸ் வென்ற இலங்கை பீல்டிங் தொடங்கியது.

ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
5-வது ஓவரில் மேத்யூஸ் பந்தில் ரோகித் சர்மா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராகுல் ஜோடி நிதானமாக விளையாடியது.

13-வது ஓவரில் பிரதீப், ஷ்ரேயாசை அவுட் ஆக்கினார். 24 ரன்கள் எடுத்த ஷ்ரேயாஸ் பெவிலியன் திரும்ப அடுத்ததாக தோனி களமிறங்கினார். இருவரும் அதிரடியாக விளையாட அணியில் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 15-வது ஓவரில் 61 ரன்கள் எடுத்த ராகுல், பெரேரா பந்தில் அவுட் ஆனார்.

இறுதி கட்டத்தில் பேட்டிங் செய்ய வந்த மணிஷ் பாண்டே 2 சிக்சர்கள் அடிக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 180 ரன்களை எட்டியது. தோனி 39 ரன்களுடனும், பாண்டே 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

 

181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிரோஷன் டிக்வெல்லா, உபுல் தரங்கா களமிறங்கினர்.
டிக்வெல்லா 13 ரன்கள் எடுத்து உனத்கட் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக குசல் பெரேரா களமிறங்கினார். தரங்கா 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஹால் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். பெரேராவும் 19 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அவர்களை தொடர்ந்து வந்தவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 16 ஓவர்கள் முடிவில் 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
இந்திய அணியின் சஹால் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here