கிரிக்கெட் ரசிகர்களே….விசில்போடுங்க!

0
0

மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதரும் விஷயங்களை பிசிசிஐ விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.
2023-ம் ஆண்டு உலகக்கோப்பை அதற்கு முன்னதாக 2021ல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுகூட்டத்தில் இதுகுறித்து முடிவானது.

முதல் முறையாக முழுதும் இந்தியாவே ஏற்று நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியாகும் இது, இதற்கு முன்னதாக, நடைபெற்ற 1987, 1996, 2011 ஆகிய உலகக்கோப்பைகளை இந்தியா நடத்தியது. இருப்பினும் அவற்றில் பிறநாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் இணைந்தே போட்டிகள் நடந்தன.

இவற்றோடு, ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதையடுத்து 2019-20-ல் ஆப்கானுடன் இந்திய அணி இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

2019-23-ம் ஆண்டுகளில் இந்திய அணி 81 போட்டிகளில் உள்நாட்டில் விளையாட வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here