இந்தியாவுடன் ஆஸி.,நியூசி., விளையாடும் கிரிக்கெட் போட்டி தேதிகள் அறிவிப்பு..!

0
0

இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி-2௦ போட்டி என்று அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கையை அணியை ஒயிட் வாஷ் செய்தது.

இந்நிலையில்,ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி2௦ போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வருகின்ற 17-ம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.இதற்கான டிக்கெட் விற்பனை நாளை மறு தினம் காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான தேதிகளை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான போட்டிகள் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி அக்டோபர் 13-ம் தேதி முடிவடைகிறது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 7-ம் தேதி முடிவடைகிறது.

போட்டிகள் விபரம் :

இந்தியா- ஆஸ்திரேலியா

பயிற்சி ஆட்டம் செப்-12 சென்னை, முதல் ஒருநாள் போட்டி செப்-17 சென்னை, 2-வது ஆட்டம் செப்-21 கொல்கத்தா, 3-வது ஆட்டம் செப்–24 இந்தூர், 4-வது ஆட்டம் செப்-28 பெங்களுரு, 5-வது ஆட்டம் அக்.-1 நாக்பூர். டி-2௦ போட்டிகள் 1-வது ஆட்டம் அக்-7 ராஞ்சி, 2-வது ஆட்டம் அக்-1௦ கவுகாத்தி, 3-வது ஆட்டம் ஹைதராபாத்.

இந்தியா-நியூசிலாந்து

இரு அணிகளுக்கிடையே அக்-17 மற்றும் 19ஆகிய தேதிகளில் 2 பயிற்சி ஆட்டங்கள் மும்பையில் நடைபெறும்.

மேலும் 1-வது ஆட்டம் அக்-22 மும்பை, 2-வது ஆட்டம் அக்-25 புனே, 3-வது ஆட்டம் அக்-29 உத்திரபிரதேசம் மற்றும் டி-2௦ போட்டிகள் முதல் ஆட்டம் நவ-1 டெல்லி, 2-வது ஆட்டம் நவ-4 ராஜ்கோட் மற்றும் 3-வது ஆட்டம் நவ-7 திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here