இந்தியா ஆஸி., பயிற்சி ஆட்டம்…! ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்..!

0
0

சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நாளை பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது.


இந்த ஆட்டத்தை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என்று தமிழ்நாடு கிரிகெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 3, டி-2௦ போட்டிகள் விளையாட இந்தியா வந்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டி வரும் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஒருநாள் போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று ஆஸி.,அணி கேட்டுக்கொண்டது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையே பயிற்சி ஆட்டம் சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இந்தப்போட்டி நாளை காலை 1௦ மணிக்கு தொடங்குகிறது. இந்த பயிற்சி ஆட்டத்தை சேப்பாக்கம் மைதானத்தின் சி, டி, மற்றும் இ. ஸ்டாண்டுகளின் கீழ் பகுதியில் அமர்ந்து ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here